பள்ளிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

 

பள்ளிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கிறது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் இருந்தாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையிலும், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “7.5% மருத்துவ படிப்பிற்கான உள் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் ஏற்படுத்தி உள்ளார். இதன் முலம் 300 மாணவர்கள் பயன்பெறுவார்கள். பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.” எனக் கூறினார்.