பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

 

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கு கல்வித்துறை வெளியிட்டது. ஆனால், ஆன்லைன் வகுப்பால் மாணவர்களுக்கு பயன் இல்லை எனவும் மாணவர்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும் எனவும் பல்வேறு கருத்துகள் எழுந்துவருகின்றன. சமீபத்தில் டிசம்பர் மாதம் வரையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய அரசின் நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

இவ்வாறு பள்ளிகள் திறப்பில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து கொண்டிருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் முடிவில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.