10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபபட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனால் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடுவது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமாரும், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸும் பங்கேற்றுள்ளனர்.