ரேஷன் கடையில் நடந்த அநியாயம்.. பைக்கில் சென்று தட்டிக் கேட்ட அமைச்சர்!

 

ரேஷன் கடையில் நடந்த அநியாயம்.. பைக்கில் சென்று தட்டிக் கேட்ட அமைச்சர்!

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல இன்று மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ரேஷன் கடையில் நடந்த அநியாயம்.. பைக்கில் சென்று தட்டிக் கேட்ட அமைச்சர்!

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் அமைச்சரிடம் ரேஷன் கடையில் அரிசி குறைவாக கொடுக்கப்படுவதாக புகார் அளித்தார். அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அந்த ரேஷன் கடைக்கு, உடனே அமைச்சர் பைக்கில் சென்று ஆய்வு செய்தார். அங்கு, அரிசி குறைவாக வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் கடையில் இருந்த பெரியசாமியை கைது செய்ய வேண்டும் என்றும் விற்பனையாளர் தாமோதரனை பணியிடை நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.