குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செஞ்சிடாதீங்க – செல்லூர் ராஜூ பேச்சு!

 

குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செஞ்சிடாதீங்க – செல்லூர் ராஜூ பேச்சு!

உள்ளாட்சி தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து விடாதீர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒத்திவைக்கப்பட்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்டது. அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் செப்-15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செஞ்சிடாதீங்க – செல்லூர் ராஜூ பேச்சு!

அதன் படி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அன்றைய தினமே பாஜக நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, உள்ளாட்சித் தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளராக தேர்வு செய்து விடாதீர்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியை கடந்து வேட்பாளர் தேர்வு முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார். மேலும், ஒருவர் தலைமையை உயர்த்தியும் ஒருவர் தலைமையை குறைத்தும் அதிமுகவினர் சமூக வலைத்தளங்கள் பதி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.