Home தமிழகம் "சின்னம்மா முன்னிலையில் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணாங்க" - அமைச்சர் செல்லூர் ராஜூ

“சின்னம்மா முன்னிலையில் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணாங்க” – அமைச்சர் செல்லூர் ராஜூ

சசிகலா முன்னிலையில் ஜெயலலிதா எனக்கு அறிவுரை வழங்கினார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. அதேசமயம் சசிகலாவுக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, போயஸ் கார்டன் வீட்டில் அம்மாவும், சின்னம்மாவும் உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அம்மா என்னை உட்கார வைத்து, எல்லாருக்கும் ஒவ்வொரு துறை கொடுத்துள்ளேன். உங்களுக்கு கூட்டுறவுத்துறையை அளித்துள்ளேன். இந்த துறையை நீ சிறப்பாக பார்த்துக்கிட்டா நம்ம அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்; அதுவே நீ கவனக்குறைவாக செயல்பட்டால் நம்ம அரசுக்கு அவப்பெயர் தான் கிடைக்கும் என சின்னம்மா முன்பு அறிவுரை அளித்தார் என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

குழப்பத்தில் திமுக? பொதுக்குழு, திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு!

மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டமும் திருச்சி மாநில மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி...

தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பாளர்களை களமிறக்க தயாராக இருக்கும் பிரதான கட்சிகள், அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன....

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால்...

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...
TopTamilNews