நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

 

நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் நடைபெற உள்ளது. கொரோனா அச்சத்தில் மாணவர்களால் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்பதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்து விட்டது. அதே போல மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியாகிவிட்டன. இந்த தேர்வுகளை எதிர்த்து 7 மாநில முதல்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளனர்.

நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

இதனிடையே, தமிழக மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் வெவ்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதால் பொதுபோக்குவரத்து இல்லாமல் எப்படி தேர்வு மையங்களுக்கு செல்வோம் என அரசுப்பள்ளி மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்னர். அதுமட்டுமில்லாமல், கொரோனாவால் தேர்வுகளுக்கு முறையாக தயாராக முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு எல்லா தரப்பிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டதாக கூறினார். எப்படியாவது நீட் தேர்வு தள்ளி வைக்கப்படாதா என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.