‘மாணவர்களின் ஆல்பாஸ் முதல்வர் எடப்பாடி’ – அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்!

 

‘மாணவர்களின் ஆல்பாஸ் முதல்வர் எடப்பாடி’ – அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்!

அரியர் மாணவர்களை ஆல்பாஸ் செய்த முதல்வர் எடப்பாடியின் புகழ் மாணவர்கள் மத்தியில் ஓங்கியிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “மாணவர்களின் ஆல் பாஸ் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். சைக்கிள் ஓட்டினால் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்தம் குறையும்” என்று கூறினார்.

‘மாணவர்களின் ஆல்பாஸ் முதல்வர் எடப்பாடி’ – அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்!

கொரோனா பொதுமுடக்கத்தால் மாணவர்கள் செமெஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத சூழல் நிலவியது. அப்போது செமெஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டணம் செலுத்தி தேர்வெழுத காத்துக் கிடந்த அரியர் மாணவர்களையும் ரத்து செய்து ஆல் பாஸ் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

எங்க ஓட்டு உங்களுக்குத் தான் என்று மாணவர்கள் முதல்வருக்கு பேனர்கள் வைத்துக் கொண்டாடினர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக அமைச்சர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுக அரசின் பெருமைகளை எடுத்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, அமைச்சர் செல்லூர் ராஜூவும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.