வரும்6 ஆம் தேதிக்கு சென்னைக்கு போகணுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

 

வரும்6 ஆம் தேதிக்கு சென்னைக்கு போகணுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை புதுமண்டபம் அருகில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “குன்னத்தூர் சத்திரம் சாதாரணமாக இருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு பெற்றுள்ளது. 28 கோடி ரூபாய் செலவில் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாததால் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

வரும்6 ஆம் தேதிக்கு சென்னைக்கு போகணுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். அதிமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர். சென்னைக்கு 6 ம் தேதி வரச்சொல்லி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை” எனக் கூறினார்.