எஸ்பிபிக்கு பதில் உயிருடன் இருக்கும் அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

 

எஸ்பிபிக்கு பதில் உயிருடன் இருக்கும் அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபிக்கு பதில் உயிருடன் இருக்கும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கூட எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக என்ற கட்சி, எம்ஜிஆர் ஜெயலலிதா வளர்த்த கட்சி. எனவே ஒருபோதும் சமுதாய மக்களை மறக்க மாட்டோம். எம்ஜிஆர் தான் எனது குரு. இன்றைக்கு திரைப்படங்கள் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள். அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவானார்கள். தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அன்றைய திரைப்படங்கள் தான் உதவின. மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அந்தச்சட்டம் சிறுபான்மை மக்கள் பயன்பெறும் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு எதிராக உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே அந்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து அதை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.

எஸ்பிபிக்கு பதில் உயிருடன் இருக்கும் அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

இயக்கத்திற்காக யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம். தமிழக மக்களுக்காக எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். கட்சியில் யார் யார் தவறு செய்கிறார்களோ அவர்களை பக்கத்தில் வைக்காமல் விரட்டி விட்டு விடுவோம். திமுகவின் ரவுடிசத்தை பார்க்க அனுமதிக்க கூடாது. மிரட்டும் கட்சி ஆட்சி யாருடையது என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் மதுரையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக உள்ளது. மோடியின் திட்டங்களையெல்லாம் நாங்கள் ஆதரித்துக்கொண்டுள்ளோம். மக்களுக்கு விரும்பாத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மோடியே பாராட்டி மிகச்சிறந்த நிர்வாகத்தை எடப்பாடி வழங்கிவருவதாக பாராட்டியுள்ளார்” என தெரிவித்தார்.

செய்தியாளர்கள் எஸ்பிபி மறைவு குறித்து கேள்வி எழுப்பியபோது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பி இறந்ததாக நினைத்து, அவர் அம்மாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். ஜெயலலிதா மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தவர் என கூறினார். உடனே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் குறுக்கிட்டு பாடகர் எஸ்பிபி உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.