“ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் ” – அமைச்சர் செல்லூர் ராஜூ

 

“ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் ” – அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவிளையாடல் படத்தில் தருமி புலம்புவது போல புலம்புகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் ” – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். ஆனால் இந்த அறிவிப்பை தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார் ஸ்டாலின். ஆனால் தேர்தலுக்கு முன்பே அதை நடைமுறைக்கு வந்து வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் தமிழகத்தில் ஸ்டாலின் சொல்வது தான் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி தான் என்று திமுகவினர் மார்தட்டி வருகிறார்கள்.

“ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் ” – அமைச்சர் செல்லூர் ராஜூ

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஸ்பின்னோ, ஃபாஸ்ட்டோ ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி. திருவிளையாடல் படத்தில் தருமி புலம்புவது போல புலம்புகிறார் ஸ்டாலின்” என்று விமர்சித்துள்ளார்.