மதுரைக்காரன் பாசக்காரன்; ரோஷக்காரன்; எதையுமே வித்தியாசமாக செய்பவன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

 

மதுரைக்காரன் பாசக்காரன்; ரோஷக்காரன்; எதையுமே வித்தியாசமாக செய்பவன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி அங்கு ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை அமைத்தது. அதனை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்க உள்ளனர். இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் இருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை தனி ரயில் மூலம் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துச்செல்கிறார்.இந்த ரயிலில் தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் சேர்ந்து பயணிக்கிறார்.

மதுரைக்காரன் பாசக்காரன்; ரோஷக்காரன்; எதையுமே வித்தியாசமாக செய்பவன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, நிறம் மாறாத பூக்களாக இருக்க வேண்டும். ஏற்றுக்கொண்ட, தலைவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் முதல்முறையாக அரசியல் கட்சி தொண்டர்களை ரயிலில் அழைத்து செல்கிறேன். நான் ஸ்டாப்பாக எங்கள் ரயில் சென்னைக்கு செல்ல உள்ளது. மதுரைக்காரன், பாசக்காரன், எதையுமே வித்தியாசமாக செய்பவன், ரோஷக்காரன். நான் தாய் மீது பற்று உள்ளவன். எங்கள் அம்மாவுக்கு நினைவிடம் கட்டி தந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என நா தழுதழுத்து கண்ணீர் விட்டு பேசினார் செல்லூர் ராஜூ.