சசிகலாவுடன் எல்லோரும் உறவோடுதான் இருந்தோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

 

சசிகலாவுடன் எல்லோரும் உறவோடுதான் இருந்தோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், அம்ரூட் திட்டப் பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து மதுரை மாநகராட்சி கருத்தரங்கு கூடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு செய்தார்.

சசிகலாவுடன் எல்லோரும் உறவோடுதான் இருந்தோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “2 கோடியே 8 லட்சம் கார்டுகளுக்கு கடந்த 13 ம் தேதி 2 கோடியே 4 லட்சம் குடும்பங்கள் பொங்கல் பரிசை வாங்கிவிட்டனர். 98.50 சதவீதம் வரை நேற்று வரை பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியுமா? ஸ்டாலின் எதைத்தான் சொல்லவில்லை. அவர் சொல்வதே அவச்சொல் தான். சசிகலா உள்ளிட்ட எல்லோரும் உறவோடு தான் இருந்தோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவுடன் உறவோடு தான் இருந்தோம். தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம். அதிமுக என்ற இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அரசு திடமாக இருக்க வேண்டும். இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம்.நாங்கள் மட்டும் அல்ல. அதிமுகவினர் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சசிகலா வெளியில் வந்த பிறகு அவர் அதிமுகவில் இணைய 100 % வாய்ப்பில்லை என தெரிவித்துவருகின்றனர்.