எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

 

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் வித்திட்டவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் திரைப்படங்களில் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தான் நடித்த படங்கள் அனைத்திலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர். எம்ஜிஆர் தைரியமாக அவர் நடித்த படத்தில் உதயசூரியன் சின்னத்தை காட்டினார், எம்ஜிஆர் போன்று உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்கும் படத்தில் உதயசூரியன் சின்னத்தை காட்ட முடியுமா? திராவிட கொள்கை வளர வித்திட்டவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

இப்போதெல்லாம் நடிகர்களுக்கு 4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என வால்போஸ்ட் ஓட்டுகிறார்கள். யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுகவை தொடங்கியவர் அறிஞர் அண்ணா, ஆனால் திமுகவில் அங்கு அண்ணாவின் பெயரோ, அவரது புகைப்படமோ இருக்காது. திமுகவில் கலைஞரின் குடும்பம் மட்டுமே உள்ளது