கொரோனா எதிரொலி: ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

 

கொரோனா எதிரொலி: ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “புதிய வாக்காளர்கள் எங்களை அணுகி வருகிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவது அரிதாகி வரும் நிலையில் அதிமுகவை நாடி இளைஞர்கள் அதிகளவில் வந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

கொரோனா எதிரொலி: ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

உதயநிதிக்கு தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம். பில்டப் செய்து திமுக கட்சியை வளர்க்க நினைக்கின்றனர். மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு முழுமையாக கொடுத்ததாக வரலாறு இல்லை. திமுக ஆட்சிக்காலத்திலும் முழுமையாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது இனிக்க இனிக்க பேசுவது, ஆளுங்கட்சியாக இருக்கும் போது குடும்பத்தை வளர்ப்பார்கள். அதிமுக மதசார்பற்ற கட்சி. அதிமுகவினர் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். அதிமுகவுக்கு மதம் கிடையாது. எங்களை பொறுத்தவரை எல்லாரும் ஒன்று தான்.

தமிழகத்தில் தலைவர் இல்லையென்று யார் சொன்னது? தமிழகத்தில் முதல்வர் எடப்பாடியார் தலைவராக உருவெடுத்துவிட்டார். மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எடப்பாடியாரை தலைவராக எண்ணுகிறார்கள். நாங்கள் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளப்போகிறோம். வெற்றி பெறப்போகிறோம். மக்கள் தேர்தல் வரும் நாளை எதிர் நோக்கி காத்துள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த மருத்துவக்குழு ஆலோசனை பெற்று கொரானா வேகம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” எனக் கூறினார்.