ரஜினி கட்சிக்கு அதிமுகவினர் செல்ல மாட்டார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு

 

ரஜினி கட்சிக்கு அதிமுகவினர் செல்ல மாட்டார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு

ரஜினி கட்சிக்கு அதிமுகவினர் செல்ல மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சிக்கு அதிமுகவினர் செல்ல மாட்டார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் புதிய கட்சியை தொடங்குவதற்கான பணிகளை ரஜினி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல்., கட்சி கொடி, சின்னம் என பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். அதே சமயம் ரஜினியின் கட்சியில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணையவுள்ளதாக அவரின் அண்ணன் சத்யநாராயணா கூறியிருந்தார்.

ரஜினி கட்சிக்கு அதிமுகவினர் செல்ல மாட்டார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினி வருகையால் தமிழக அரசியலில் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை. அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் யாரும் ரஜினி கட்சிக்கு செல்ல மாட்டார்கள். நேற்றுவரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொதுவெளிக்கு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் எடப்பாடியார் அலை வீசுகிறது” என்றார்.