‘ஸ்டாலின் சொல்லி நிதி தர வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை’ – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

 

‘ஸ்டாலின் சொல்லி நிதி தர வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை’ – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

நிவர் புயலால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களுக்கு ஆளும் அரசும், எதிர்க்கட்சியும் மாறி மாறி நிவாரண உதவி வழங்கி வருகின்றன. கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி, நிவாரண முகாம்களின் தங்கியிருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதே போல, அதிமுக அமைச்சர்கள் பலரும் நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் களமிறங்கினர்.

‘ஸ்டாலின் சொல்லி நிதி தர வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை’ – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் திமுக உறுப்பினர்களும் பிரமுகர்களும் நிவாரணம் வழங்கி வந்தனர். சென்னையின் பல இடங்களில் நிவாரண உதவிகள் அளித்த மு.க ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் இது குறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, புயலை வைத்து திமுக விளம்பரம் தேடிக் கொண்டதாக விமர்சித்தார். ஸ்டாலின் சொல்லி தான் நிதி தர வேண்டம் என்ற அவசியம் அரசுக்கு இல்லை என்றும் நிதி இருந்தால் முதல்வரே மக்களுக்கு அள்ளி வழங்குவார் என்றும் தெரிவித்தார்.