“இது முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…”

 

“இது முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…”

உலகையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டுக்கள் தெரிவித்திருந்தார். கொரோனாவை எதிர்த்து போராட பல மாநில அரசுகள் திணறிக் கொண்டிருந்த போதும் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தது தமிழக சுகாதாரத்துறை. இதன் பின்னணியில் முழு வீச்சில் செயல்பட்டவர் முதல்வர் பழனிசாமி. அவரது செயல்பாடுகள் எதிர்கட்சியினரை மிரள வைத்தது. அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதல் அலையை கட்டுக்குள் கொண்டு வந்த முதல்வர் பழனிசாமி, இரண்டாம் அலையையும் கட்டுக்குள் கொண்டு வர முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

“இது முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…”

இந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கொரனோ இரண்டாம் அலையில் இருந்து விரைவில் மீள வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டேன். தமிழகத்தில் முதல்வரின் நல்லாட்சி அமைந்திட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. முதல்வரின் ஆட்சி மீண்டும் அமையும் என நம்புகிறோம் என்று கூறினார்.

“இது முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…”

தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது முதல்வர் பழனிசாமி கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.