குறிப்பிட்ட ஜாதி பெயரை ஸ்டாலினை திட்டியதால் சர்ச்சை! மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ

 

குறிப்பிட்ட ஜாதி பெயரை ஸ்டாலினை திட்டியதால் சர்ச்சை! மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ

மதுரை அருகே உள்ள பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, குறிப்பிட்ட சமுதாயத்தை மேற்கோள்காட்டி, அவர்களின் புத்திதானே ஸ்டாலினுக்கு வரும் என பேசியதாக சர்ச்சை எழுந்தது.

குறிப்பிட்ட ஜாதி பெயரை ஸ்டாலினை திட்டியதால் சர்ச்சை! மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து சற்றுமுன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக நான் பழமொழியை குறிப்பிட்டேன். நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. செய்தியாளர் சந்திப்பில் நான் ஜாதி குறித்து பேசவில்லை. தேர்தல் நேரத்தில் எனக்கு யாரும் ஜாதி சாயம் பூச வேண்டாம். செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து நான் பேசியதாக நினைத்தால் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கத் தாமதமாவதற்கு, டெண்டர் குறித்து பேரம் பேச படுவதே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பதிலளிக்கையில் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்ட சாதிப் பெயரை சொல்லி ஸ்டாலினை வசைப்பாடினார் என்பது குறிப்பிடதக்கது.