“ஆவணங்கள் கொடுத்தால் கோயில் சொத்துகளை மீட்க ரெடி” – ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

“ஆவணங்கள் கொடுத்தால் கோயில் சொத்துகளை மீட்க ரெடி” – ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக அறநிலைய துறை அமைச்சகத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் கவனம் பெற்று வருகின்றன. அதற்குக் காரணம் திமுகவை இந்துக்கள் விரோதி என பாஜக பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமில்லாமல் ஜக்கி வாசுதேவ் கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என பரப்புரை செய்துவந்தார். இதனால் அமைச்சர் சேகர்பாபுவின் நகர்வு என்ன என்பதில் எதிர்பார்ப்பு கிளம்பியது.

“ஆவணங்கள் கொடுத்தால் கோயில் சொத்துகளை மீட்க ரெடி” – ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அதனைப் பூர்த்தி செய்யும் விதமாக அறநிலையத் துறை நிர்வாகப் பணிகள் புயல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல ஒருசில அறிவிப்புகளையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலாம் ஆகிய அறிவிப்புகளை சேகர்பாபு கூறியிருந்தார். இதனை பாஜக தலைவர் எல்.முருகன் கூட வரவேற்றார். அதேபோல தினமும் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன.

“ஆவணங்கள் கொடுத்தால் கோயில் சொத்துகளை மீட்க ரெடி” – ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

பாஜக தலைவர் ஹெச்.ராஜா திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அறநிலையத் துறையை சரமாரியாக விமர்சித்து வருகிறார். இப்போதும் அறநிலையத் துறையின் திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறாது. சில நாட்களுக்கு முன் பேசிய அவர் ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறினார். தற்போது அதற்குப் பதிலளிக்கும் விதமாம அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். சிவகங்கையில் நேற்று கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதை பார்வையிட வந்த அவரிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது.

“ஆவணங்கள் கொடுத்தால் கோயில் சொத்துகளை மீட்க ரெடி” – ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அதற்கு அவர், “ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் ஹெச்.ராஜா அதற்கான ஆவணங்களை கொடுத்தால், அதனை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயில்களுடைய சொத்துக்களை யார் அபகரித்தாலும் ஆண்டவன் கொடுக்கும் உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். மற்றவர்களை குறை சொல்லாமல் ஆன்மீக சொத்துக்களை பாதுகாக்க எங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோயில் சொத்துக்களை அபகரித்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.