‘கோவில் நிலங்களுக்கு பட்டா என்கிற பேச்சுக்கே இடமில்லை’… அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

 

‘கோவில் நிலங்களுக்கு பட்டா என்கிற பேச்சுக்கே இடமில்லை’… அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் கோவில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் எனவும் கோவில் நிலங்களுக்கு பட்டா என்கிற பேச்சுக்கே இடமில்லை எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

‘கோவில் நிலங்களுக்கு பட்டா என்கிற பேச்சுக்கே இடமில்லை’… அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில்களில் ஐந்தாண்டுகள் யானை பாகன்களாக பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 180 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றி யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவில்களின் நிலங்கள் மன்னர்கள் மற்றும் ஜமீன்தாரர்களால் இலவசமாக கொடுக்கப்பட்டது என்பதால் அந்த நிலங்களுக்கு பட்டா கொடுக்க முடியாது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. எனவே கோவில்நிலங்களுக்கு பட்டா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.