பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு இதுவே காரணம்! அமைச்சர் விளக்கம்

 

பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு இதுவே காரணம்! அமைச்சர் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் கருவறை தீவிபத்திற்கு, ஊழியர்களின் அஜாக்கிரதை தான் காரணம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Fire damages roof Mandaikadu Bhagavathi Amman Temple - The Hindu

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கடந்த 2-ம் தேதி தீவிபத்திற்கு உள்ளான நிலையில் அந்த கோயில் கருவறை மண்டபம் முற்றிலுமாக எரிந்து சேதமானது. அதையொட்டி, நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலை தேவ பிரசன்னம் பார்த்து பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கேரள பாரம்பரிய படி தேவ பிரசனம் பார்க்க கேரள மாநிலம் வையநாடு பகுதியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீநாத்ம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் வருகை தந்து தேவபிரசன்னம் மேற்கொண்டனர்.

பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு இதுவே காரணம்! அமைச்சர் விளக்கம்

இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கோவில் ஊழியர்களின் அஜாக்கிரதையே தீ விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கை வந்த உடன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இக்கோயிலில் மேற்கூரை அமைக்கும் பணிக்காக 50 லட்சம் ரூபாயும், தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற வேலைகளுக்காக 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவ பிரசன்னத்தில் கூறும் கருத்துக்களை ஒட்டி மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறும். கோயில் திருப்பணிக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் முதல்வரின் உத்தரவை பெற்று கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” எனக் கூறினார்.