ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும்- தமிழக அரசு

ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும்- தமிழக அரசு

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளி கட்டடங்களை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது பாழடைந்து போன பள்ளிகளை சீரமைத்து மாணவ மாணவியர்களை அதிகப்படியாக சேர்ப்பதற்கு அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார்.

ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும்- தமிழக அரசு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு வாடகை செலுத்தாமல் யார் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் உரிய வாடகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்களை விரைவில் கணக்கெடுத்து தொல்லியல் துறை அனுமதியுடன் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும்” என தெரிவித்தார்.