Home தமிழகம் "ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி" - அமைச்சர் சேகர் பாபு

“ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி” – அமைச்சர் சேகர் பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

"ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி" - அமைச்சர் சேகர் பாபு
"ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி" - அமைச்சர் சேகர் பாபு

கடந்த மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயில் நிலங்களை மீட்டெடுத்து வருவதுடன் அதன் முழு விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் விரைவில் அமல்படுத்த முனைப்பு காட்டி வருகிறார்.

"ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி" - அமைச்சர் சேகர் பாபு

இந்நிலையில் திருப்பூர் திருமுருகண்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், விஸ்வேஸ்வரர் ஆலயம், வீரராகவ பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “திமுக ஆட்சியில் கோவில்கள் அனைத்தும் தூய்மை நிறைந்த நந்தவனங்களாக காட்சியளிக்கும்.ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 100 நாட்களில் அவை முழுமையாக செயல்படுத்தப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்காத கோவில்கள் விரைவில் புரனமைக்கப்படும். கோயில் நிலத்தை ஆக்ரமித்த அவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

"ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி" - அமைச்சர் சேகர் பாபு

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews