கோயில் நகைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட முடியாது : அமைச்சர் சேகர் பாபு

 

கோயில் நகைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட முடியாது :  அமைச்சர் சேகர் பாபு

கொரோனாவால் ஒரு உயிர்கூட பறிபோகாத நிலை வரும் போது தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோயில் நகைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட முடியாது :  அமைச்சர் சேகர் பாபு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேகர் பாபு, அறநிலையத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்ட அமைச்சர் சேகர் பாபு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , வாடகை வசூல் அளித்தல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தினார். அதன்படி முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கோயில்களின் 72% நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கோயில் நகைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட முடியாது :  அமைச்சர் சேகர் பாபு

இந்நிலையில் சொத்துப் பட்டியலைப் போன்று கோயில்களில் உள்ள நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது; அது பாதுகாப்பு காரணத்திற்காக தான் என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் . தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தொற்று பாதிப்பு முற்றிலும் இல்லை என எப்பொழுது நிலை வருகிறதோ அப்போது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடந்த மண்டபத்தை புனரமைப்பு அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்த அவர் , கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி ஆமை வேகத்தில் நடந்தது; தற்போது நடக்கும் ஆட்சி முயல் வேகத்தில் நடக்கும்என்றார்