உழவாரப் பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர் பாபு

 

உழவாரப் பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உழவாரப் பணிகள் இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை துவக்கி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

உழவாரப் பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பொறுப்புக்கு வந்தவுடன் பல அதிரடியான செயல்களை மேற்கொண்டு வருகிறார். அவர் கோயில் நிலங்களை மீட்டெடுத்து வருவதுடன் அதன் முழு விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் விரைவில் அமல்படுத்த முனைப்பு காட்டி வருகிறார்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 100 நாட்களில் அவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உழவாரப் பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை இன்று அமைச்சர் சேகர் பாபு தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் இ-பதிவு சேவை மூலம் பதிவு செய்துகொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து இதுவரை ரூபாய் 600 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுவரை நூறு ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அவற்றில் முதற்கட்டமாக 170 கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.