வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

 

வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திடீரென வயலில் இறங்கி நாற்று நட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருகை தந்தார்.

மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்ட அவர், கல்குத்திபதி என்னும் கிராமத்திற்கு செல்லும்போது வயலில் மலைவாழ் மக்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர், திடீரென அவர்களுடன் வயலில் இறங்கி, இணைந்து நாற்று நட்டார்.

வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

நாற்று நட்டுக்கொண்டே அந்தப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், உடனிருந்த அதிகாரிகளிடம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் செய்யப்படும் பயிர்கள் உள்ளிட்ட விவரங்களையும் அமைச்சர் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.