நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

 

நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான மாதம்பட்டி, பூண்டி, வால்பாறை, மேட்டுப்பாளையம், ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆற்றில் வரும் வெள்ள நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாதம்பட்டி அருகே தங்கள் ஆற்றுப்படுகையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

அமைச்சர் எஸ் பி வேலுமணி, செல்லும் வெள்ள நீரை கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களையும் வேகமாக நிரப்ப வேண்டும். மேலும் அனைத்து நீர்நிலைகளும் பாதுகாப்பாக உள்ளதா என்பது பற்றியும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.