“தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது” – அமைச்சர் செங்கோட்டையன்

 

“தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது” – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கிறது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் இருந்தாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையிலும், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

“தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது” – அமைச்சர் செங்கோட்டையன்

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

“தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது” – அமைச்சர் செங்கோட்டையன்

இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா பரவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.