அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மாஸ்க் தரமற்றவை – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

 

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மாஸ்க் தரமற்றவை – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சியில் வழங்கிய இலவச முகக் கவசங்கள் தரமற்றவை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வென்று தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இரண்டே மாதத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது திமுக அரசு. அண்மையில் அதிமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மாஸ்க் தரமற்றவை – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் தரமற்ற மாஸ்க் வழங்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நாடா துணியில் தயாரித்ததை மாஸ்கை வழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 மாஸ்க் என்ற வீதத்தில் ரேஷன் கடைகள் மூலம் துவைத்து பயன்படுத்தக் கூடிய துணி மாஸ்க்கை வழங்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.