‘அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை’ – அமைச்சர் ஆவேசம்!

 

‘அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை’ – அமைச்சர் ஆவேசம்!

சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே, கடந்த 20ம் தேதி உடல்நலக்குறைவால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்த நிலையில் இன்று காலை 11:45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் வீட்டுக்கு சென்ற காரில், அதிமுக கொடி பொறுத்தப்பட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டே சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான காரில் அதிமுக கொடி இருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை’ – அமைச்சர் ஆவேசம்!

இந்த நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சி பொறுப்பில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது; அதனை ஏற்க முடியாது. 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை பயன்படுத்தும் சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.