மின் கணக்கீடு : டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்!

 

மின் கணக்கீடு : டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்தடை பெரும் பிரச்னையாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை தலைவிரித்தாடியது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், இனி தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி விடும் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

மின் கணக்கீடு : டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்!

இதுகுறித்து விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதனால்,10 நாட்களுக்கு மின்தடை பிரச்னை இருக்கும். அதன் பிறகு சரி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். கடந்த முறை செய்த தவறை இந்த முறை சரி செய்ய எண்ணியிருக்கும் திமுக அரசு, 10 நாட்களில் மின் பராமரிப்பு பணியை செய்து முடித்து மின்தடை பிரச்னையை போக்கியுள்ளது.

மின் கணக்கீடு : டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்!

இந்த நிலையில், மின்கணக்கீடு செய்ய டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள 900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என்றும் கடந்த ஆட்சியில் 9 மாதம் செய்யாமல் இருந்த பராமரிப்பு பணி 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.