“அரசு காப்பீட்டு திட்ட அறிக்கையை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை”- அமைச்சர் சாமிநாதன்

 

“அரசு காப்பீட்டு திட்ட அறிக்கையை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை”- அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர்

தமிழக அரசின் காப்பீட்டு திட்ட அறிக்கையை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஆட்சியர் விஜயகார்த்திகேயன், எம்எல்ஏ-க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“அரசு காப்பீட்டு திட்ட அறிக்கையை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை”- அமைச்சர் சாமிநாதன்

மேலும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து நாளை முதல் நிறுவனங்களை அடைப்பதற்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர் சாமிநாதன், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வரு ம்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அமைச்சர் சாமிநாதன், உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு அட்டை வைத்திருந்தும் அதை ஏற்றுகொள்ளாத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.