ரேஷன் கார்டில் தலைவரின் பெயரை மாற்றினால்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000? அமைச்சர் விளக்கம்

 

ரேஷன் கார்டில் தலைவரின் பெயரை மாற்றினால்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000? அமைச்சர் விளக்கம்

அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டில் தலைவரின் பெயரை மாற்றினால்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000? அமைச்சர் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, “ஆட்சி பொறுப்பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்ததை போன்றே கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. இதுவரை 99 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களும் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டுவிட்டது. குடும்பத் தலைவிக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

3 மாதகாலத்தில் அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபட்டதாக 1,800 வழக்குகள் பதியப்பட்டு,
1,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரம் நியாய விலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் வாடகை செலவை குறைக்க சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். 3 லட்சத்து 38 ஆயிரத்து 512 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” எனக் கூறினார்.