“முதல்வர் பழனிசாமியை மாணவர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்க” அமைச்சர் ஆர்பி உதயகுமார்

 

“முதல்வர் பழனிசாமியை மாணவர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்க” அமைச்சர் ஆர்பி உதயகுமார்

நீட் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்த தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜீவித் குமாருக்கு மதுரையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அரசு பள்ளிகளில் படித்தால் நீட் தேர்வு எழுத முடியுமா, முடியாதா என்கிற விவாதம் நடைபெறுகிறது. நீட் தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தோம். நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் வழங்கி உள்ளார். முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமார் நிரூபித்து காட்டி உள்ளார். உழைப்பவர்கள் என்றும் வீண் போவதில்லை. மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்தை சரியாக கையாள வேண்டும். மாணவர்கள் முன் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.

“முதல்வர் பழனிசாமியை மாணவர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்க” அமைச்சர் ஆர்பி உதயகுமார்

போட்டி தேர்வு என்பது தகுதியை வெளியே கொண்டு வருவதற்கு உதவும். கால அவகாசம் கொடுத்தால் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள். நீட் தேர்வுக்காக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. விடா முயற்சி எடுத்தால் மாணவர்கள் சாதிக்க முடியும். சாதித்தவர்களின் வரலாற்றை மாணவர்கள் திரும்பி பார்க்க வேண்டும். தமிழகத்தில் உயர்க்கல்வியின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கல்வியில் உலகலாவிய அளவில் தரத்தை உயர்த்தப்பட்டு வருகிறது. உழைப்பால் உயர்ந்த தமிழக முதல்வரை மாணவர்கள் முன் உதாரணமாக கொண்டு வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்” எனக் கூறினார்.