“என்னய எப்படியாவது ஜெயிக்க வச்சிடுங்க’ காலில் விழுந்து ஓட்டு கேட்ட அமைச்சர்!!

 

“என்னய எப்படியாவது ஜெயிக்க வச்சிடுங்க’ காலில் விழுந்து ஓட்டு கேட்ட அமைச்சர்!!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகமே களைகட்டியுள்ளது. தேர்தலில் நிற்பவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் ஓயாமல் வீடு தேடி வந்து ஓட்டு கேட்பதால் மக்களும் பிசியாக உள்ளனர். இந்த தேர்தலிலும் திமுக – அதிமுகவுக்கு தான் நேரடி போட்டி. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ள நிலையில் அதிமுகவில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர்களில் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டாவது முறையாக திருமங்கலத்தில் போட்டியிடுகிறார் ஆர்.பி.உதயகுமார்.

“என்னய எப்படியாவது ஜெயிக்க வச்சிடுங்க’ காலில் விழுந்து ஓட்டு கேட்ட அமைச்சர்!!

சாமானிய மக்களின் வீடுகளில் தண்ணீர், டீ குடிப்பது, தேநீர் கடைகளில் மாஸ்டராகி டீ போடுவது, முதியோர் காலில் விழுவது போன்றவை தேர்தல் நேரத்தில் பரவலாக காட்டப்படும் அரசியல் காட்சிகள் தான். அதை கொஞ்சமும் பிசுறு தட்டாமல் செய்து வருகிறார் ஆர்.பி. உதயகுமார்.

“என்னய எப்படியாவது ஜெயிக்க வச்சிடுங்க’ காலில் விழுந்து ஓட்டு கேட்ட அமைச்சர்!!

இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் புளியம்பட்டி, கெஞ்சம்பட்டி, ஆதனூர், போலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து வரும் ஆர்.பி. உதயகுமார் , துவரம்பருப்பு அறுவடை செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள், முதியோர், விவசாய கூலிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவர் மகள் பிரியதர்ஷினி, எனது அப்பாவை இந்த தொகுதிக்காக அர்ப்பணித்து விட்டோம். அவர் எப்போதும் உங்களை பற்றி தான் நினைக்கிறார். அவரை மீண்டும் வாக்களித்து வெற்றிபெற செயுங்கள் என்று தனது பங்குக்கு சென்டிமெண்டால் தாக்கி வருகிறார்.