நீட் மற்றும் ஜேஇஇ தேர்வே மாணவர்களின் விருப்பம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வே மாணவர்களின் விருப்பம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை எழுத மாணவர்கள் விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தவையே. இந்த கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சாமாக மீண்டெழுந்து வருகிறது. இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் பல்வேறு மாநிலங்களில், செமெஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதே போல அடுத்த மாதம் நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வே மாணவர்களின் விருப்பம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஆனால் எந்த காரணத்தை கொண்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்த தேர்வு முகமை, மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டது. இதனிடையே 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு தான் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். காங்கிரஸ் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் நாளை தமிழகத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வே மாணவர்களின் விருப்பம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்த நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாணவர்கள் விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நேற்று ஹால் டிக்கெட் வெளியானவுடன் 10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கும், 7.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அதிகளவு மாணவர்கள் ஒரே நாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது அவர்கள் தேர்வெழுத விரும்புவதை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.