“சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா இல்லை”

 

“சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா இல்லை”

சிங்கங்களை தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா இல்லை”

உதகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை சிறுவர் மன்றத்தில் 80 குழந்தைகள் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிங்கங்களை தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்றார். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களை காப்பாற்ற மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து உணவுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் வைத்து சாப்பிட வழங்கபட்டு வருகிறது.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்கும் விதமாக தோண்டபட்டுள்ள அகழிகளின் மேற்பரப்பில் கான்கிரீட் தடுப்பு அமைக்கவும் சோலார் மின்வேலி அமைக்கவும் நிபுணர்களுடன் ஆலோசிக்கபட்டு வருகிறோம். நிபுணர்களின் பரிந்துறை படி விரைவில் முடிவு செய்யபட்டு அமல்படுத்தபடும்.நீலகிரி மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இங்கு இதுவரை 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.