கடுமையான நடவடிக்கையை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

கடுமையான நடவடிக்கையை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா தயங்காது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய-சீன எல்லையான லடாக்கில் அண்மையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அந்த திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இருப்பினும், சீனப்படையை விரட்டி அடித்த வீரர்கள் எல்லையில் அமைதியை நிலைநாட்டினர். அதன் பிறகு எல்லையில் பதற்றம் நிலவியதால் எல்லை மீறக்கூடாது என இந்திய ராணுவம் சீன ராணுவத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகும் கடந்த மாதம் மீண்டும் சீன ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடுமையான நடவடிக்கையை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இதனையடுத்து ரஷ்யா சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் எல்லையில் சீன ராணுவம் தான் அத்துமீறுவதாகவும், ஒப்பந்தத்தை மீறினால் இந்திய ராணுவம் பொறுத்துக் கொள்ளாது என்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் எல்லை பிரச்னை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ராஜ்நாத் சிங், நமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க விட மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.

கடுமையான நடவடிக்கையை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளை இந்தியா எடுக்க தயங்காது என்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.