நானும் ரவுடிதான்…. முதல்வரின் வாகனத்தில் Foot board அடித்த ராஜேந்திர பாலாஜி

 

நானும் ரவுடிதான்…. முதல்வரின் வாகனத்தில் Foot board அடித்த ராஜேந்திர பாலாஜி

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 நாட்களே உள்ளன. இதற்கான தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் ஒருபுறம் வேகமாக செய்து வருகிறது. அதே போல் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாராத்தை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து பேசி வருகிறார்.

நானும் ரவுடிதான்…. முதல்வரின் வாகனத்தில் Foot board அடித்த ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வாகனத்தில் அமைச்சரும், விருதுநகர் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி, Foot board அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.