• February
    17
    Monday

Main Area

Main



"ரஜினி மல; அஜித் தல " ரஜினிக்கு நிகர் அஜித் தான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக சட்டப்பேரவையில் நேற்று  ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் ஆளும் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். காரணம்  அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

ttn

இந்நிலையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   'இது அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட் என்று கூறிய அவரிடம் விஜய் வீட்டில் வருமான பரிசோதனை நடந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  விஜய் வீட்டில் நடந்த சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தல' என்று கூறியுள்ளார். 

ttn

ஏற்கனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததாகச் சீமான் உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.