வெற்று பெற்ற பிறகு அனைவரிடமும் ஒழுங்காக நடந்துகொள்வேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

வெற்று பெற்ற பிறகு அனைவரிடமும் ஒழுங்காக நடந்துகொள்வேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார்.

இதனையடுத்து ராஜபாளையம் அருகே தளவாய்புரம், செட்டியார் பட்டி, முகவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியுடன் இணைந்த தளவாய்புரம், முகவூர் பகுதிகளை இணைத்து ஒரு நகராட்சி ஆகவும், சேத்தூர் பேரூராட்சி உடன் இணைந்த முத்துசாமிபுரம் பகுதிகளை இணைத்து ஒரு நகராட்சி என ராஜபாளையத்தில் உள்ள இரண்டு பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுங்கள். வெற்று பெற்ற பிறகு விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வேன் ந பரப்புரையில் ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வெற்று பெற்ற பிறகு அனைவரிடமும் ஒழுங்காக நடந்துகொள்வேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எம்ஜிஆர், ஜெயலலிதா பொற்கால ஆட்சிக்கு உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். என் சொந்தத் தொகுதி சிவகாசி என்றாலும் எனது சொந்தக்காரத் தொகுதி ராஜபாளையம். எனவே இங்கு போட்டியிடுகிறேன்,ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றால் விருப்பு வெறுப்பின்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளராக பணியாற்றுவேன். என்னுடைய பணியும் பேச்சும் வேகமாக இருக்கும் ஆனால் நேர்மையாக இருக்கும். என்னுடைய மனசாட்சிக்கு புறம்பான எந்த செயலையும் எப்போதும் நான் செய்ய மாட்டேன். தெய்வத்துக்கு ஒப்பாத செயலை ஒரு நாளும் செய்ய மாட்டேன்.” எனக் கூறினார்.