இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை கடந்து கொரோனா யாருக்கு வந்தாலும் அரசு கவனித்து வருகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை கடந்து கொரோனா யாருக்கு வந்தாலும் அரசு கவனித்து வருகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் அம்மாவின் அரசு கனிவுடன் கவனித்து வருகிறது. இதற்கிடையே கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம். மின் கட்டணம் குறித்து போராட்டம் நடத்த திமுகவிற்கு தகுதி கிடையாது. பிரச்சனைகள் வராதா என்று காத்திருக்கும் கூட்டம்தான் திமுக கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் தகுதியை ஏற்கனவே இழந்துவிட்டார். தமிழக மக்கள் மீதும் தமிழ் மீதும் பாரத பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். தமிழுக்கு எதிராக மோடி ஒரு கணமும் செயல்பட மாட்டார்.

இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை கடந்து கொரோனா யாருக்கு வந்தாலும் அரசு கவனித்து வருகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா பாதிப்பு வந்தததில் இருந்து, ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. தனியார் பால் கம்பெனிகள் அனைத்தும் மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். தனியார் பால் கம்பெனிகளுக்கு பால் ஊற்றியவர்களிடம், அவர்களது நலன் கருதி ஆவின் நிர்வாகம் பால் வாங்கி வருகின்றது” எனக்கூறினார்.