“முதல்வரின் அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

“முதல்வரின் அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

“முதல்வரின் அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இலவசமாக மக்கள் அனைவருக்கும் அரசின் செலவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவுசெய்தார். அதில், இலவச கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா தமிழக முதல்வர்?மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை! நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

“முதல்வரின் அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஸ்டாலினின் நீலிக் கண்ணீரும் அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது. கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம். கொடுக்கின்ற குணம் வள்ளல் வாரிசுகளுக்கே வரும். 2021 அதிமுக ஆட்சி மலரும்; இதுவே இனி சரித்திரம்” என்று கூறியுள்ளார்.