Home அரசியல் திமுகவிற்கு சகுனம் சரியில்லை; ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது! - மீண்டும் எல்லை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுகவிற்கு சகுனம் சரியில்லை; ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது! – மீண்டும் எல்லை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக மீது தினமும் ஊழல் புகார் கூறிவந்த ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதனால் பதிலுக்கு ராஜேந்திரபாலாஜியை கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின். இதனால் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கொந்தளித்தார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து போராட்டம், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

திமுகவிற்கு சகுனம் சரியில்லை; ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது! - மீண்டும் எல்லை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியதற்கு. முன் விளைவுகள் பின்விளைவுகள் என அனைத்தையும் பார்த்தவன் நான் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “முதலமைச்சரை குறை கொள்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக மாவட்டம் முழுதும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு முதல்வர். தனது முடியை பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர் ஸ்டாலின். நான் கோமாளி அல்ல ஸ்டாலின் தான் இந்தத் தேர்தலுக்குப் பின் ஏமாளியாக போகிறார். தன்னை விளம்பரப்படுத்துவதற்காக 350 கோடி ரூபாயை பீகார் காரரரிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார். என் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதையும் சந்திக்க நாங்கள் தயார். திமுகவிற்கு சகுனம் சரியில்லை.. அனைவருக்கும் மரியாதை அளிப்பவன் நான். முதலமைச்சர் கட்டுப்படுத்தியதற்காக அமைதியாக இருக்கிறோம்.

This image has an empty alt attribute; its file name is rajendrabalaji2-1024x1024.jpg

தமிழக மக்களுக்காக திமுகவை எதையும் செய்ததில்லை. அலைக்கற்றை வரிசையில் ஊழல் செய்தவர் ராசா. அவர் அழுக்கை வைத்துக் கொண்டு எங்களை விமர்சனம் செய்யக்கூடாது. அதிமுக கைப்படாத ரோஜா அல்ல. ஒரு சில தவறுகள் நடக்கலாம். அது திருத்திக் கொள்ளப்படும். திமுக அழுகிப்போன தக்காளி கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது.. தமிழகத்தில் இரு புயல்கள் ஏற்பட்ட போதும் இறப்பு என்பதை தடுத்தது அதிமுக அரசு. எங்கள் இயக்கத்தின் தலைவர்யோ மரியாதையாக பேசினால் நாங்களும் மரியாதையாக நடந்து கொள்வோம். இல்லை என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் ராசா வெளியில் நடமாட முடியாது மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனக் கூறினார்.

திமுகவிற்கு சகுனம் சரியில்லை; ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது! - மீண்டும் எல்லை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனத்தால் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு ஈரோடு வீரப்பன்சத்திரம் மையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? – நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்...

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

தடுப்பூசி போட கிராமத்திற்கு வரும் டாக்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பார்த்து ஓடி ஒளிந்துகொள்வதும், ஊருக்குள் விடாமல் அடித்து உதைத்து அனுப்பிய சம்பவங்களும் முன்பெல்லாம் நடந்துள்ளன. இப்போதும் அந்த சம்பவங்கள் நடக்கின்றன.
- Advertisment -
TopTamilNews