கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பாஜகவும் ஒன்று தான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பாஜகவும் ஒன்று தான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பா.ஜ.க வும் ஒன்று தான் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆவின் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார் சென்ற ஆண்டு 80 ஆயிரம் கிலோ ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யபட்டது. இந்த ஆண்டு 1 லட்சம் கிலோ ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பாஜகவும் ஒன்று தான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஆவின் பால் பண்ணைகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும், மக்கள் சேவை பாதிப்படையாமல் பால் உற்பத்தி விநியோகம் செய்யப்பட்டது. ஊழல் குறித்து பேச கூடிய அருகதை ஸ்டாலினுக்கு கிடையாது. ஒரு காலும் ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது. தேவர் ஜெயந்தி அன்று கொடுத்த திருநீறை கீழே தள்ளி விட்டுவிட்டு கொள்கை என ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஸ்டாலின் இழக்க போகிறார்

கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பா.ஜ.கவும் ஒன்று தான். எடப்பாடி பழனிசாமி அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்படுபவன் நான். அதிமுகவின் கூட்டணி கட்சி பா.ஜ.கதான்” எனக் கூறினார்.