“ஸ்டாலின் மாதிரி ஓபிஎஸ் கொரோனா வார்டுக்கு சென்றாரா?”

 

“ஸ்டாலின் மாதிரி ஓபிஎஸ் கொரோனா வார்டுக்கு சென்றாரா?”

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவை தொகையை ஓபிஎஸ் கூறி வழங்கவில்லை என்றும், தொழிலாளர்களின் நலன் கருதியே தமிழக அரசு வழங்கியதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் மாதிரி ஓபிஎஸ் கொரோனா வார்டுக்கு சென்றாரா?”

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்று நிலுவையில் இருந்த ஓய்வூதிய பணப் பயன்கள் 2,457 போக்குவரத்து பணியாளர்களுக்கு 497 கோடியே 32 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. பெண்களுக்காக இயக்கப்படும் இலவசப் பேருந்துகளால் ஏற்கனவே இயங்கி வரும் பேருந்துகள் குறைக்கப்படாது. பின்ங்(pink) பேருந்துகள் என கூறப்படும் பெண்களுக்கான சிறப்பு பேருந்துகள் செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய பணப் பயன்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வழங்கவில்லை. முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் எந்த கொரோனா மையத்திற்கும் செல்லதாவர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் போல் கவச உடை அணிந்து ஓ பி.எஸ் கொரோனா வார்டுக்கு சென்றுள்ளாரா? கொரோனா காலத்திலும் நிதியை ஒதுக்கி தொழிலாளர் நலன் காத்த முதல்வர் ஸ்டாலின், மற்ற தொழிலாளருக்கு வழங்குவது பரிசீலனையில் உள்ளது” எனக் கூறினார்.