எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது ஏன் ? : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது ஏன் ?  :  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது ஏன் ?  :  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை தொழிற்சாலை, அட்டைப்பெட்டி தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், கணக்கில் வராத ரூ.25 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இது திமுகவின் பழிவாங்கும் அரசியல் என்று சாடியுள்ள அதிமுக வரும் 28 ஆம் தேதி திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது ஏன் ?  :  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும் நிலையில் தான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை; பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்றார்.தொடர்ந்து பேசிய அவர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள தமிழக வீரர்களுடன் வாட்ஸ் அப்பில் பேசி வருகிறோம். தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் நிச்சயமாக பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.