மாஃபா வாய்க்கு வந்தபடி உளறுவார்; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – அமைச்சர் பிடிஆர் அதிரடி!

 

மாஃபா வாய்க்கு வந்தபடி உளறுவார்; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – அமைச்சர் பிடிஆர் அதிரடி!

பொருளாதாரம் தெரியாத மாஃபா பாண்டியராஜன் வாய்க்கு வந்தபடி அநாவசியமாக பேசுவார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழ்நாட்டின் வளங்கள் அதிகரித்திருப்பதால் அதிக கடன் கொடுத்துள்ளனர் என மாஃபா பாண்டியராஜன் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், மாஃபா பாண்டியராஜன் வாய்க்கு வந்தபடி அநாவசியமாக பேசுவார். பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்பது உண்மை. மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் பற்றி தெரியாது. அவர் ஏதாவது உளறிக் கொண்டு இருந்தால் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

மாஃபா வாய்க்கு வந்தபடி உளறுவார்; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – அமைச்சர் பிடிஆர் அதிரடி!

தொடர்ந்து பேசிய அவர், அரசாங்கத்தின் நோக்கம் வெளிப்படையாக இருக்கிற சூழலில் மக்களிடம் சொல்ல வேண்டும். 110 விதியின் கீழ் 300 முதல் 400 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இதுவரை எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டன என்பது தெரியவரவில்லை. தகவல்களை திரட்ட வேண்டும், மக்களிடம் அதனை சொல்ல வேண்டும், நிபுணர்களிடம் மக்களின் கருத்தை சொல்லி அதை எப்படி திருத்தலாம் என்று யோசிக்க வேண்டும், அதற்குப் பிறகு ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்த வேண்டும். இது தான் ஜனநாயக மரபு. அது தான் வெளிப்படைத்தன்மை. அதிமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதா? உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி மைனஸ் நிலைமைக்கு தள்ளிவிட்டனர் என்றார்.

மேலும், வரிகள் உயர்வு எப்போது என்பது குறித்து எதுவும் கூற இயலாது. பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லாமல் கேள்வி எழுப்ப வேண்டாம். தவறான சூழலை திருத்த வேண்டுமானால் உண்மையைக் கூற வேண்டியுள்ளது. ஒரு ரூபாய் கடன் வாங்கி 50 பைசா முதலீடு என்பது சரியான நிர்வாகம் அல்ல என்றும் தெரிவித்தார்.