12 லட்ச ரூபாய் சொந்த பணத்தில் சாலை அமைத்த கவுன்சிலருக்கு அமைச்சர் பாராட்டு

 

12 லட்ச ரூபாய் சொந்த பணத்தில் சாலை அமைத்த கவுன்சிலருக்கு அமைச்சர் பாராட்டு

சொந்த பணத்தில் சாலை அமைத்த கவுன்சிலருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 9-ம் வார்டு கவுன்சிலர் தமிழரசி. இவர் சுயேட்சை வேட்பளராக கடந்த ஊராட்சி தேர்தலில் களத்தில் நின்றார். அங்கே மக்கள் அவரிடம் கேட்டது, வேப்பூர் செல்ல சாலை வசதி இல்லை. அதை அமைத்து தருவீர்களா… என்பதுதான். மற்ற கவுன்சிலர் வேட்பாளர்களைப் போலவே தமிழரசியும் நிச்சயம் சாலை அமைத்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

தமிழரசியின் வாக்குறுதியை நம்பிய மக்கள், அவரை தேர்தலில் ஜெயிக்க வைத்தார்கள். தன்னை வெல்ல வைத்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் செல்ல மனம் வரவில்லை தமிழரசிக்கு.

12 லட்ச ரூபாய் சொந்த பணத்தில் சாலை அமைத்த கவுன்சிலருக்கு அமைச்சர் பாராட்டு

தனது சொந்தப் பணம் 12 லட்சம் ரூபாய் செலவு செய்து 20 அடி அகலத்திற்கு 1 கிலோமீட்டர் நீளம் கொண்ட தார் சாலையை வேப்பூருக்கு அமைத்துக்கொடுத்தார். சுமார் 50 ஆண்டுகளாக வெற்றிப்பெற்ற வேட்பாளர்களிடம் கேட்டு கேட்டு அலுத்துப்போன மக்களுக்கு தமிழரசியின் இந்தச் செயல்பாடு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. சாலை பணிகள் முடிவெடைந்தது, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுவிட்டது.

இந்தச் செய்தியை அறிந்த  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ஸ்.பி.வேலு மணி தன் பாராட்டுகளை சமூக ஊடகம் வழியே தெரிவித்திருக்கிறார்.

12 லட்ச ரூபாய் சொந்த பணத்தில் சாலை அமைத்த கவுன்சிலருக்கு அமைச்சர் பாராட்டு

அவரின் பாராட்டுச் செய்தியில், ‘பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் யூனியன் பெண் கவுன்சிலர் தமிழரசி, சாத்தநத்தம் – வேப்பூர் இடையேயான 20 அடி அகல 1 கீ.மீ சாலையை தன் சொந்த பணம் 12 லட்சம் ரூபாயை செலவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்துக் கொடுத்துள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து அதற்கேற்றார் போல் விரைந்து செயல்பட்டு முன்னுதாரணமாக திகழும் கவுன்சிலர் தமிழரசிக்கு எனது பாராட்டுகள். அவரது மக்கள் பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.